ty;yikapd; thu;j;ij

நாம் எதை நம்புகிறோம்

நாங்கள் தகப்பனையும் மகனையும் நம்புகிறோம்.
யோவான் 14:1

"பிதாவை நம்புங்கள், என்னையும் நம்புங்கள்".
தகப்பனாகிய தேவனும், மகனாகிய யெஷூஆவும்

பிதாவாகிய தேவன், அவருடைய பெயர் யாவே, ஒரே உண்மையான தேவன்; அவரைத் தவிர வேறு ஒருவருமில்லை.

உபாகமம் 4:35
யாவே தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு அது உங்களுக்கு காண்பிக்கப்பட்டது. அவரைத் தவிர வேறு எவருமில்லை.

உபாகமம் 6:4
இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய யாவே ஒருவரே யாவே.

உபாகமம் 32:39
நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் குணப்படுத்துகிறேன், என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.

ஏசாயா 40:25
இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 43:10,11
நானே அவரென்று நீங்கள் உணர்ந்து என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று யாவே சொல்லுகிறார்;. எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே யாவே என்னையல்லாமல் இரட்சகர் இல்லை.

ஏசாயா 44:6
நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய யாவேயும்;, சேனைகளின் யாவேயாகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.

ஏசாயா 44:8
நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததும் இல்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள்; என்னைத்தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே ஒருவனையும் அறியேன்.

ஏசாயா 45:5-6, 18, 21-22
5. நானே யாவே, வேறொருவர் இல்லை என்னைத்தவிர தேவன் இல்லை.
6. என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது மறைகிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே யாவே, வேறொருவர் இல்லை.
18. வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய யாவே சொல்லுகிறதாவது: நானே யாவே, வேறொருவர் இல்லை.
21. நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள் துவக்கி இதை அறிவித்தவர் யார்? யாவேயாகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.
22. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.

ஏசாயா 46:5
யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?

மாற்கு 12:29-30, 32
29. இயேசு அவனுக்குப் மறுமொழியாக: “கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய யாவே ஒருவரே யாவே.”
30. “உன் தேவனாகிய யாவேயினிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு உள்ளான மனுஷனோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கட்டளை.”
32. அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது உண்மை ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை.

யோவான் 8:41
“நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள்” என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல;
ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர் தேவன் என்றார்கள்.

யோவான் 17:3
“ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய யெஷூஆ மெஷாயாவையும் அறிவதே நித்தியவாழ்க்கை”.

தகப்பனாகிய தேவன் மகனை வெளிப்படுத்த வேண்டும், மகனும் தமக்கு சித்தமானவர்களுக்கு தகப்பனை வெளிப்படுத்துகிறார். தகப்பனையும்; மகனையும் அறிய வேறு வழியில்லை.

மத்தேயு 11:27
“சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் மகனை அறியான்; மகனும்;, மகன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.”

தகப்பனாகிய தேவனையோ மகனையோ அறியாமல் பல கிறிஸ்தவ பிரசங்கிகள் அல்லது போதகர்கள் இருக்க வாய்ப்புள்ளது.

யோவான் 8:19
அப்பொழுது அவர்கள்: “உம்முடைய பிதா எங்கே என்றார்கள். யெஷூஆ பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள். என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள்” என்றார்.

கிறிஸ்தவ பிரசங்கிகள் அல்லது ஆசிரியர்கள் தங்கள் தகப்பன் பிசாசு என்பதை முற்றிலும் அறிந்திருக்க முடியாது

யோவான் 8:44
“நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; உண்மை அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.”

தங்கள் வாழ்க்கையில் தேவன்; இல்லாத கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படும் பலர் உள்ளனர்

2 யோவான் 1:9
கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் மகனையும் உடையவன்.

நித்திய ஜீவன் என்றால் என்ன?

யோவான் 17:3
“ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய யெஷூஆ மெஷாயாவையும் அறிவதே நித்தியவாழ்க்கை.

யெஷூஆவின் போதனைகளை விசுவாசித்து கீழ்ப்படிதல்

யோவான் 3:36
குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
இயேசுவை நம்புகிறவர்கள் அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

பிதாவாகிய தேவன் நமக்கு நித்திய வாழ்க்கையை கொடுத்திருக்கிறார்.

1 யோவான் 5: 11
தேவன் நமக்கு நித்தியவாழ்க்கையை தந்திருக்கிறார், அந்த வாழ்க்கை அவருடைய மகனில்; இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.

மகனைப் பெற்றவனுக்கு வாழ்க்கை உண்டு.

1 யோவான் 5: 12
மகன் உடையவன் வாழ்க்கையை உடையவன், தேவனுடைய மகன்; இல்லாதவன் வாழ்க்கை இல்லாதவன்.

நமது ஐக்கியம் தகப்பனுடனும் மகனுடனும் மட்டுமே உள்ளது.

1 யோவான் 1:3
"நீங்களும் எங்களோடே ஐக்கியமாயிருக்கும்படிக்கு, நாங்கள் கண்டதையும் கேட்டதையும் உங்களுக்கும் அறிவிக்கிறோம்; நம்முடைய ஐக்கியம் தகப்பனோடும் அவருடைய மகனாகிய யெஷூஆ மெஷாயாவுடனும் இருக்கிறது.

பரிசுத்த ஆவி - உதவியாளர்- தேற்றரவாளன் (பரக்கிலிரோஸ்) பற்றி யோவான் 14 இல் யெஷூஆ சொன்னது, உயிர்த்தெழுந்த யெஷூஆ மட்டுமே!

1 யோவான் 2: 1
என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற யெஷூஆ மெஷாயா நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிறவராயிருக்கிறார்.

நாம் அவருக்குள் இருக்கிறோம், அவர் நம்மில் இருக்கிறார் என்பதை எப்படி அறிவது?

1 யோவான் 3:24
அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.
1 யோவான் 4:13
அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.

கிறிஸ்துவின் போதனைகள் பிதாவாகிய தேவனின் போதனைகள்

யோவான் 7: 15,16,17
அப்பொழுது யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள். யெஷூஆ அவர்களுக்குப் மறுமொழியாக: “என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.” “அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.”

எந்த போதகரும் யெஷூஆவின் போதனைகளை கற்ப்பிக்காவிட்டால், அவன் ஒன்றும் அறியாதவனும் வருமானத்தை நோக்குகிறவனும், பெருமை உள்ளவனுமாயிருக்கிறான்.

1 தீமோத்தேயு 6:3-5
ஒருவன் நம்முடைய எஜமானாகிய யெஷூஆ மெஷாயாவின் ஆரோக்கியமான வார்த்தைகளையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி, கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.
ரோமர் 16:17,18
அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன். அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

ஒருவன் உன்னிடத்தில் வந்து, இந்த உபதேசத்தைக் கொண்டுவரவில்லையென்றால், அவனை உன் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதலும் சொல்ல வேண்டாம்;.

2 யோவான் 1:9,10,11
கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, யெஷாயாவின்; உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ தகப்பனையும் மகனையும் உடையவன். ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.

யெஷூஆ பிரசங்கித்த ஒரே நற்செய்தி வரவிருக்கும் தேவனுடைய ராஜ்யம்.

மாற்கு 1:15, மத்தேயு 4:23, 9:35
"மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறது."

அதே நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி அவர் சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்

மத்தேயு 10:7
"நீங்கள் போகும்போது, 'பரலோக ராஜ்யம் சமீபமாயிற்று' என்று அறிவியுங்கள்.

நற்செய்தியைப் பிரசங்கிக்கும் நோக்கத்திற்காக அவர் அனுப்பப்பட்டார்

லூக்கா 4:43
ஆனால் அவர் அவர்களிடம், "நான் தேவனுடைய ராஜ்யத்தைப் மற்ற பட்டணங்களிலும் பிரசங்கிக்க வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்" என்றார்.

ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி முடிவுபரியந்தம் உலகத்தில் பிரசங்கிக்கப்படும்

மத்தேயு 24:14
ராஜ்யத்தின் இந்த சுவிசேஷம் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும், பின்னர் முடிவு வரும்.

பிலிப்பு தேவனுடைய ராஜ்யத்தைப் பிரசங்கித்தார்

அப்போஸ்தலர் 8: 12
தேவனுடைய ராஜ்யத்துக்கும் யெஷூஆ மெஷாயாவினுடைய பெயருக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள்.

பவுல் தேவனுடைய ராஜ்யத்தைப் பிரசங்கித்தார்

அப்போஸ்தலர் 20:24,25
ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என்
பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன்.

பவுல் இரண்டு வித்தியாசமான நற்செய்தியைப் பிரசங்கிக்கவில்லை. அவர் ஒன்றை மட்டுமே பிரசங்கித்தார்

அப்போஸ்தலர் 28:30,31
பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருஷமுழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு, மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, எஜமானாகிய யெஷூஆ மெஷாயாவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.

பவுல் ஒரே ஒரு நற்செய்தியைத்தான் பிரசங்கித்தார்

கலாத்தியர் 1:6-8
உங்களைக் யெஷாயாவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

யெஷூஆ சொன்னார் நானே உலகத்துக்கு ஒளி

யோவான் 8:12
யெஷூஆ மறுபடியும் அவர்களை நோக்கி: நானே உலகத்துக்கு ஒளி என்னைப் பின்பற்றுகிறவன் இருளில் நடக்கமாட்டான், ஜீவ ஒளியைப் பெறுவான்.

யெஷூஆவை பின்பற்றுவது என்றால், அவர் வாழ்ந்த வாழ்க்கையை பின்பற்றுவது.

யெஷூஆவை பின்பற்றி, வார்த்தையைப் பின்பற்றி, அவருடைய வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறவர்கள் - வெளி 19:13

யெஷூஆ உங்களுக்குள் வரும்போது, நீங்கள் ஒளியாகிறீர்கள்.

மத்தேயு 5:14,15
நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். “விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.”

மத்தேயு 5:16
“இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.”

யெஷூஆவை விசுவாசிப்பது என்பது, அவருடைய வார்த்தைகளை நம்புவதும், அவற்றுக்குக் கீழ்ப்படிவதும் ஆகும்.

யோவான் 4: 39 -41
நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள். சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டு நாள் அங்கே தங்கினார். அப்பொழுது அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து, அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.

இயேசுவை விசுவாசிப்பது என்பது அவருடைய வார்த்தைகளை நம்பி அவற்றுக்குக் கீழ்ப்படிவதைக் குறிக்கிறது.x உண்மையின் வெளிப்பாடு போகப்போக பெருகிக்கொண்டே போகும்.

யோவான் 8:31,32
யெஷூஆ தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;” “சத்தியத்தையும் அறிவீர்கள், உண்மை உங்களை விடுதலையாக்கும்” என்றார்.

உண்மையை புறக்கணிப்பதால், வரும் அபாயம்!

யோவான் 17:17
உம்முடைய உண்மையினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வார்த்தையே உண்மை.
யாராவது உண்மையை அறிந்த பிறகு, அவர்கள் அதை விட்டு விலகினால் அல்லது புறக்கணித்தால் தேவன் அவர்களுக்கு பொய்ய விசுவாசிக்க கொடிய வஞ்சகத்தை அனுப்புவார். அந்த கொடிய வஞ்சகத்திலிருந்து அவர்கள் விடுபட முடியாது.

2 தெச 2:11,12
ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

அதாவது, எந்த காரணத்தையிட்டும் உண்மையை விற்காதே! அப்படி உண்மையை விற்றால் தேவன் அனுப்பும் கொடிய வஞ்சகத்திற்கு நீ தப்ப முடியாது.

நீதிமொழிகள் 23:23
உண்மையை வாங்கு, அதை விற்காதே அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.
எந்த காரணத்திற்காகவும் உங்கள் வாழ்க்கையில் உண்மையை விற்கவோ, நிராகரிக்கவோ அல்லது புறக்கணிக்கவோ வேண்டாம்.

பரிசுத்த ஆவியானவர்

யோவான் 17:3 ஆங்கிலத்தில்
“ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியவாழ்க்கை”.
ஒரே உண்மையான தேவன்;, யெஷூஆவின் தகப்பனாகிய தேவன்;. அவர் பரிசுத்தர், அவர் ஆவியாயிருக்கிறார்;, அவரே பரிசுத்த ஆவி. இது தகப்பனாகிய தேவனின் இயற்கையான சுபாவம். தகப்பனாகிய தேவனின் தெய்வீக இயல்பு “பரிசுத்த ஆவி”.

அவர் மக்களுக்கு கொடுப்பது அவரது இயற்கையான சுபாவத்தின் பரிசு, “பரிசுத்த ஆவி”.

அப்போஸ்தலர் 2:38
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
தகப்பனாகிய தேவன் தனது இயற்கையான சுபாவத்தைப் பரிசாக கொடுக்கிறார்.
அப்போஸ்தலர் 5:32
இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.

பரிசுத்த ஆவிக்கு எதிரான மன்னிக்க முடியாத பாவம் அல்லது தூஷணம் என்றால் என்ன?

பரிசுத்த ஆவி என்பது தகப்பனாகிய தேவனின் தெய்வீக இயல்பு.
மத்தேயு 10:20 மாற்கு 13:11 லூக்கா 12:12
பிதாவின் ஆவியை “பரிசுத்த ஆவி” என்று யெஷூஆ சொன்னார்.
பரிசுத்த ஆவிக்கு எதிரான தூஷணம், தகப்பனாகிய தேவனுக்கு எதிரான தூஷணமாகும்.

மனந்திரும்புதலும் பாவங்களை மன்னிப்பதும், இயேசுவின் நாமத்தினாலே மட்டுமே உள்ளது.

லூக்கா 24:46,47
“எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;” “அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.”

மேலிருந்து பிறந்த ஒரு விசுவாசியின் இலக்கு எருசலேம்

மத்தேயு 5:5
“சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கிவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.”

வெளிப்படுத்தின விசேஷம் 2:26
ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 5:10
எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.

பொய்யர் மற்றும் அந்திக்கிறிஸ்து யார்?

1 யோவான் 2:22
யெஷூஆவை மெஷாயா அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? தகப்பனையும் மகனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

யெஷூஆவின் போதனையில் நிலைத்திராதவர்களுக்கு தகப்பனும் மகனும் இல்லை.

2 யோவான் 1: 9
மெஷாயாவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, மெஷாயாவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ தகப்பனையும் மகனையும் உடையவன்.

1 கொரிந்தியர் 8:5,6
வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு
இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,
பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். யெஷூஆ மெஷாயா என்னும் ஒரே எஜமானும் நமக்குண்டு வார்த்தையின் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, வார்த்தை மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.